Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு - கர்நாடக செயலர் வெளிநடப்பு

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 8.75 டி.எம்.சி அளவு தண்ணீர் திறந்துவிடக் கோரி கரநாடகத்திற்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு அளித்தது. 

சற்றுமுன் புதுடில்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் மத்திய நீர் பாசனக் குழு தலைவர் டி.வி.சிங் தலைமையில் கூடியது.இக்கூட்டத்தில் தமிழகம்,கர்நாடகம்,கேரளா மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த நீர் வளத்துறை செயலர்கள் பங்குபெற்றனர்.இந்த நிலையில் மத்திய நீர்வளக் குழு அளித்த அறிக்கையின் படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 8.75 டி.எம்.சி அளவு தண்ணீரை அக்டோபர் மாதம் முழுவதும் திறந்து விடக்கோரி கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் கர்நாடகத்தின் நீர் வளத்துறை செயலர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதேபோல் இதற்கு முன்னர் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டத்திலும் கர்நாடகம் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து மத்திய நீர் பாசனக் குழு தலைவர் டி.வி.சிங் தெரிவிக்கையில் மத்திய குழுவினரின் அறிக்கையின் படிதான் நான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டேன் எனவும் இதை மதிக்காமல் கர்நாடகம் வெளிநடப்பு செய்தது எனவும் கூறினார்.

காவிரி நதிநீர் பிரச்சனை பெரிதாகி வருகிற நிலையில் இது இரு மாநிலத்திற்கும் பல சிக்கல்களை ஏற்ப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post