Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனர் பி.ஆர்.பழனிச்சாமி மீது கொலை முயற்சி புகார்

மதுரையில் முறைகேடாக கிரைனட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக சிறையில் இருக்கும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனர் பி.ஆர்.பழனிச்சாமி மீது திருவாதவூர் அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த மார்நாடு என்பவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் தெய்வேந்திரன், முருகேசன் ஆகியோரின் தூண்டுதல் பேரில் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் தன்னை தாக்கி கொல்ல முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆறுமுகம், சசி, சமத்துவன் துரை உள்ளிட்ட 8 பேர் மீது மேலூர் காவல்துறையினர் கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே தலைமறைவாகிவிட்ட 8 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான மார்நாடு, மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கிரனைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மார்நாடு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post