Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜ்மல் கசாப் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது

தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.


கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.இதனால் மும்பை உயர் நீதிமன்றம் கசாப்பிற்க்கு தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டது.இதனை கடந்த மாதம் உச்ச நீதிம்னறம் உறுதி செய்தது.

இந்த நிலையில் மும்பை தாக்குதலின் முக்கிய பயங்கரவாதியான அஜ்மல் கசாப் தனக்கு அளித்த தூக்கு தண்டனையை நீக்கக் கூறி அளித்த கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.குடியரசு த் தலைவருக்கு அவன் அளித்த கருணை மனுவை நிராகரிக்க பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post