Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையும், வரும் 28ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த இரண்டு நாட்களும், வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த முகாம்களில் வாக்காளர்களுக்கு தேவையான உரிய படிவத்தை வழங்கவும், பூர்த்தி செய்த படிவத்தைப் பெறவும் அதிகாரிகள் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை 25674019 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என பிரவின்குமார் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post