Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு : கர்நாடாகவில் மத்திய குழு இன்று ஆய்வு

காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம் வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

முன்னதாக இந்த கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பிரதிநிகள் ஆகியோர் காவிரி கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

இதனிடையே, காவிரி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய குழு, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியது. 

இக்குழுவினர் கர்நாடக அதிகாரிகளுடன் இன்று, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இக்குழுவினர் அளிக்கும் அறிக்கை காவிரி கண்காணிப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்படும். 

அக்டோபர் 15ம் தேதி வரை, தமிழகத்துக்கு தினமும் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, அதற்கு பின்னர் நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தான் தமிழகத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post