Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விழுப்புரம் அருகே பள்ளிப் பேருந்து மோதி விபத்து - மூன்று வயது பெண் குழந்தை பலி


விழுப்புரம் அருகே பள்ளிப் பேருந்து மோதி மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகே இன்று மாலை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மீது பள்ளிப் பேருந்து ஒன்று மோதியது.இதில் வாணிஸ்ரீ என்ற அந்த பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.வாணிஸ்ரீயின் அண்ணனை பள்ளிப் பேருந்து வீட்டில் இறக்கிவிட வந்த பொது இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் குழந்தைகள் மீது ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post