Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஞ்சலியை முத்தமிட்ட ஆர்யா.


இந்தியில் வெளியான "டெல்லி பெல்லி" படத்தை  தமிழில் "சேட்டை" என்ற பெயரில் தயாரித்து வருகின்றனர்.இப்படத்தில் ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி,ஹன்ஷிகா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துக்கொண்டுள்ளனர்.

இந்தியில் வெளியான "டெல்லி பெல்லி" படத்தில், பூர்ணா ஜெகன்நாதன், அவருடைய காரை பின்னோக்கி திருப்பிக் கொண்டிருக்கும் போது இம்ரான் கான் அவரை முத்தமிடும் காட்சி ஓன்று உள்ளது.

இக்காட்சியை  தமிழில் தயாராகி வரும் "சேட்டை"படத்திலும் அப்படியே உருவாக்க வேண்டும் என நினைத்த படத்தின் இயக்குனர் கண்ணன், இது குறித்து அஞ்சலியிடம் சொன்ன போது, கண்டிப்பாக இக்காட்சியில் நடிக்க  மறுத்துள்ளார் அஞ்சலி.

ஆயினும் இப்படத்தில் இக்காட்சியின் முக்கியத்துவம் குறித்து இயக்குனர் கூறிய பின்னரும் அத்தோடு படத்தில் நடிக்கும் அத்தனை கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக அஞ்சலியை கேட்டுக் கொண்டதன் பின்னரும் இக்காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அஞ்சலி.

மேற்படி காட்சியானது மும்பையில் படமாக்கப் பட்டு வருகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post