Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுமின் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் - சு.ப.உதயகுமார்



திரு உதயகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றிலுமாக, நிரந்தரமாக மூடிவிட்டு அதனை ஒரு மாற்று வழி மின்சாரத் திட்டமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசும் அணுசக்தித் துறையும் தமிழக மக்களிடம் வறட்டு கௌரவம் பாராட்டி கூடங்குளம் அணு உலையில் சர்வாதிகாரமான முறையில் எரிபொருளை நிரப்பி, இயக்க எத்தனித்தால், நாங்களும் எங்கள் போராட்டத்தை தீவிரமாக்குவோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்தேனும் அதனை நிறுத்துவதற்கு நாங்கள் அணியமாயிருக்கிறோம். அணுசுழற்சி நடத்தப்பட்ட நிலையத்தை வேறு வழிகளில் உபயோகிக்க முடியாமலாகி மிகுந்த பொருட் செலவில் அதனை செயலிழக்கச் செய்ய வேண்டி வரும். அப்போது நாட்டுக்கு மாபெரும் பொருள் இழப்பு ஏற்படும். இந்த விடயங்களை மனதில் நிறுத்தி மாநில அரசும், மத்திய அரசும் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டு தமிழ் மக்களைக் காக்க முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

அக்டோபர் 29 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உதயகுமார் அழைப்பு . காணொளி இணைப்பை பார்க்கவும் .


[vuukle-powerbar-top]

Recent Post