Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயார் என்கிறார் சோனியா மருமகன் ராபர்ட்


தனக்கு எதிராக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த டி.எல்.எஃப். ரியல் எஸ்டேட் நிறுவனம் சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு, வட்டியில்லா கடனாக 65 கோடி ரூபாய் வழங்கியதாகவும் , அதற்கு பிரதி பலனாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் டி,எல்.எஃப். நிறுவனத்திற்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

இதுதொடர்பாக முழுமையானா விசாரணை நடத்த வேண்டும் என்றும் இருவரும் கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது குறித்து, தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்த ஒரு பிரச்னையையும் சந்திக்க தயாராக இருப்பதாக ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.  இந்த குற்றச்சாட்டை டி.எல்.எஃப். நிறுவனமும் மறுத்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post