Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடை அடைப்பு

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து வணிக நகரமான கொச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் என கேரளா மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வணிகர்களின் இந்த போராட்டத்திற்கு கேரள மாநில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்நிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ள வணிகர்கள், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post