Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரும்பப்பட்ட அகில இந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்க போராட்டம்

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கமிஷனை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, அகில இந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

42 ஆயிரம் பெடரோல் பங்க்குகள் வழக்கம் போல செயல்படும் என்று அந்த சங்கம் அறிவித்திருக்கிறது. பெட்ரோலுக்கான கமிஷன் லிட்டருக்கு 1 ரூபாய் 49 காசுகளில் இருந்து 2 ரூபாய் 16 காசுகளாக உயர்த்த வேண்டும், டீசலுக்கான கமிஷன் தொகை லிட்டருக்கு 91 காசுகளில் இருந்து 1 ரூபாய் 32 காசுகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையுடன் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் எட்டு முதல் 10 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அகில இந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post