Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலர் மீதான தாக்குதல் –இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி

இலங்கை அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலின் உச்சக்கட்டமாகவே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலக ரட்ன, நேற்று கல்கிசைப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நான்கு ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

தனது வாகனத்தில் இருந்து நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்த அவரை வெளியே இழுத்த, ஆயுதபாணிகள் தாக்கிவிட்டு அவரது கைத்தொலைபேசியையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

முகம் மற்றும் கைகளில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ண கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை கேள்வியுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளனர். அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்துமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேவேளை இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று நீதிமன்றங்களைப் புறக்கணிக்கப் போவதாக சட்டவாளர்களும், நீதிபதிகளும் அறிவித்துள்ளனர்.

நீதித்துறைக்கும் இலங்கையின் அரச நிர்வாகத்துறைக்கும் இடையிலான முறுகல் உச்சமடைந்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதல் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post