Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பள்ளி வாகன ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து பள்ளிகள் போராட்டம் அறிவிப்பு


நவ.19 பள்ளி வாகனங்கள் இயங்காது தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு மழலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி  மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் பத்திரிகையாளர்களிடம், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:

தமிழகஅரசின் எந்த உதவியும் இல்லாமல், அரசின் பணிச்சுமையை குறைத்து, கிராமம் கிராமமாக அலைந்து, மாணவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்காக, 18 ஆயிரத்து, 854 வாகனங்கள், தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர, வேறு எந்த பணிக்கும், அந்த பஸ்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அந்த வாகனங்கள், ஒரு நாளைக்கு அதிகபட்ச்சம் 50 கி.மீ.க்கு மேல் ஓடாது. சென்னை சியோன் பள்ளி பேருந்து விபத்தை காரணம் காட்டி, புதிதாக ஒரு ஆணை வெளியிடப்பட்டது. அந்த ஆணையை அமல்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பஸ்ஸில் கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். உள்ளூரில் ஒரு ஆய்வுக்குழு, வட்டாரத்தில் ஒரு ஆய்வுக்குழு, மாவட்டத்தில் ஒரு ஆய்வுக்குழு, சிறப்பு ஆய்வுக்குழு, பள்ளி அளவில் ஆய்வு, பெற்றோருக்கு முன் ஆய்வு என, மூன்று மாதத்துக்கு ஒரு முறை பேருந்துகளுக்கு தகுதிச்சான்று பெற வேண்டும் என்பது போன்ற கடுமையான சட்டங்கள் போடப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளை ஒழிக்க போட்டுள்ள இச்சட்டத்தை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக நீதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர உள்ளோம். எங்களுடைய பிரச்னைகளை, கஷ்டங்களை, பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி ஆதரவு கேட்டு, நவம்பர், 19-ம் தேதி, ஒரு நாள், பள்ளி வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைப்போம் என்று அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post