Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"பரீட்சைக்கு நேரமாச்சு" படத்தில் மீண்டும் நடிக்க இருக்கும் வை.ஜி.மகேந்திரன்.


அண்மையில் தனது "ஒன்றுபட்ட தன்னார்வ கலைஞர்கள்" கூட்டமைப்பின் 60 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிய வை.ஜி.மகேந்திரன் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சிக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்து கொண்டிருந்தார்.

இவ்வாறானதொரு நிகழ்ச்சிக்கு எதற்காக சந்தானம் கலந்து கொண்டிருந்தார் என்பதன் பின்னணி பிறகுதான் தெரிந்தது.வை.ஜி. மகேந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த "பரீட்சைக்கு நேரமாச்சு" படத்தை மீண்டும் இயக்கி அதில் "நடிகர் திலகம்" கதாபாத்திரத்தில் வை.ஜி.மகேந்திரன் அவர்களும்,வை.ஜி யின் கதாபாத்திரத்தில் சந்தானமும் நடிப்பது தொடர்பாக  இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாள் பேச்சுவார்த்தை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாகவே வை.ஜியின் நிகழ்ச்சிக்கு சமூகமளித்திருக்கிறார் சந்தானம்.இப்படத்தை மீண்டும் தயாரிப்பதில் இருவருமே ஆவலாக இருக்கின்ற போதிலும், உத்தியோகபூர்வமான செய்திகள் இன்னும் முடிவாகவில்லை.



[vuukle-powerbar-top]

Recent Post