Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெட்ரோல் விலை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவது ஏன்?

கச்சா எண்ணெய் விலை சரிவு,இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு,போன்றவற்றால், பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நல்ல லாபத்தில் இயங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அவை பெட்ரோல் விலையை குறைக்க தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 16 முதல் 30ம் தேதி வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 புள்ளி 7 டாலர் குறைந்தது. அதே காலத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 1 ரூபாய் 83 காசு அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு டாலர் குறைந்தால், இந்தியாவில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 33 பைசா வரை குறைக்க முடியும். அதேபோல, அன்னிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 ரூபாய் உயர்ந்தால், லிட்டருக்கு 77 பைசா வரை பெட்ரோல் விலையை குறைக்க சாத்தியங்கள் உள்ளன.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி, பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாய் வரை லாபம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post