Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வந்தது.இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வந்தது.தற்பொழுது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்க்கு நோக்கி ஆந்திரா மற்றும் குமரி கடற்பரப்பில் னகர்ந்து கொண்டு வருவதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் தமிழக அரசு மழையால் ஏற்ப்படும் பாதிப்புகளை சமாளிக்க தேவையான போர்க்கால நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post