Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் சிம்பு.


அஜித்தின் மிக பெரிய விசிறியாக இருக்கும் சிம்புவிற்கு, எப்படியாவது அஜித்துடன் சேர்ந்து குறைந்தது ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்துள்ளது.

அண்மையில் அஜித்தை சந்தித்த சிம்பு, அவருடைய படத்தில் நடிப்பதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டதாகவும்,அதற்கு சம்மதம் தெரிவித்த அஜித், "சிறுத்தை" சிவா இயக்கத்தில் தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் நாம் இருவருமே சேர்ந்து நடிக்கலாம் என கூறியதாகவும் கோடம்பாக்கம் முழுவதும்  கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகளவிலான இரசிகர்கள் பட்டாளத்தை  கொண்டுள்ள இவ்விருவரும் சேர்ந்து நடிக்கும் பட்சத்தில்,அது அவர்கள் இரசிகர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா இரசிகர்களுக்குமே விருந்தாகும் என்பதில் ஐயமில்லை.

[vuukle-powerbar-top]

Recent Post