Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீவிரவாதிகளுக்கு எதிராக அரசால் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை ~ ஆசிப் அலி சர்தாரி

ஒருமித்த கருத்து இல்லாததால், தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசால் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற தெற்காசிய ஊடக கூட்டமைப்பு மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

மத ஆதரவாளர்களின் வாக்குகளைக் குறி வைத்து எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் எதிர்க்கட்சிகள் அரசின் பக்கம் நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

எனினும் இது விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்கும் என்று நம்புவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நாடு இரண்டாக பிரிந்து இருப்பதை எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற பேச்சுக்கள் உணர்த்துவதாக சர்தாரி தெரிவித்தார்.

எனினும் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒருமித்த கருத்து அவசியமாகிறது என்றார் அவர்.

தலிபான்களால் சிறுமி மலாலா சுடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஆசிப் அலி சர்தாரி, இது நாட்டின் உயர்ந்த மதிப்பீடுகளுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் எதிரானது என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post