Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"விஸ்வரூபம்" வில்லனின் தன்னடக்கம்.


 தன்னுடைய அசாத்தியமான நடிப்பினால், நாடு முழுவதிலும் உள்ள மக்களால் மிக இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய நடிகர், ராகுல் போஸ்.நடிப்பு மட்டுமன்றி, தேசிய ரக்பி அணியின் ஒரு அங்கத்தவராகவும்,சமூக சேவையாளராகவும் விளங்குகிறார்.

எந்த கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகராக விளங்கும் ராகுல் போஸ், கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" படத்தின் மூலமாக தமிழ் இரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவுள்ளார்.அண்மையில் வெளியான "விஸ்வரூபம்" படத்தின் முன்னோட்டக்  காட்சியில் இடம்பெற்ற ராகுல் போஸின் கதாபாத்திரமானது, அச்சுறுத்தக் கூடிய மிக பயங்கரமான , ஈவு இரக்கமின்றி மக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதியாக அமைந்திருந்தது.

இப்படம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் போஸ்,நிச்சயமாக தான் அதிர்ஷ்டக்காரன் என்றும் அல்லாவிடில் உலகநாயகன் கமல்ஹாசனின் படத்தில் நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் தெரிவித்தார். நடிகர் கமலை பொறுத்தவரை எல்லோரையும் சமமாக கருதக் கூடிய மிக உன்னதமான நடிகர் எனவும் தெரிவித்தார்.

அவருடைய படத்தில் அவருடன் நடித்தது தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பாக தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post