Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வியாழக் கிழமை வரை கிங் பிஷர் விமான சேவை இரத்து ~ பயணிகள் அவதி

விமானிகள், பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வரும் வியாழக் கிழமை வரை விமான சேவையை கிங் பிஷர் நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

ஊதிய உயர்வு, சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டு காலமாக கிங் பிஷர் நிறுவன விமானிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதே கோரிக்கையை முன்வைத்து நேற்று மும்பை, சென்னையில் விமானிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமானிகளுக்கு ஆதரவாக விமான பணியாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். 

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை வரை கிங்பிஷர் நிறுவன விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஒரு பகுதி பணியாளர்கள் கடமையில் இருந்து தவறியதே, இதற்கு காரணம் என்று கிங்பிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இருந்து நாள் தோறும் கிங் பிஷர் நிறுவனத்தால் இயக்கப்படும் 12 விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. இதனால் விமான பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.
[vuukle-powerbar-top]

Recent Post