Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தோண்டியதால் தோண்டப்படும் வழக்குகள் - மதுரையில் புதிதாக ஒரு கிரனைட் வழக்கு

மதுரையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கற்களை தோண்டியதால் புதிதாக ஒரு கிரனைட் குவாரி மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மதுரையில் கிரனைட் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று புதிதாக குமார் கிரனைட் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.உறங்கான்பட்டி என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமன இடத்தில் கிரனைட் கற்களை தோண்டி எடுத்ததால் கிராமா நிர்வாக அலுவலர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.இது குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் கடந்த சில மாதங்களாக தோண்ட தோண்ட கற்கள் குவிந்தது போல் வழக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.கிரனைட் குவாரிகள் எந்த அளவுக்கு அதிகமாக கற்களை தோண்டியதோ அந்த அளவுக்கு வழக்குகள் குவிக்கப்பட்டு வருகின்றன.மேலும் கிரனைட் வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் துறை தயாநிதி தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post