Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் இணையும் செல்வா மற்றும் யுவன் ஜோடி.


இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா  கூட்டணியில் அமைந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் மிக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தன.

"காதல் கொண்டேன்" படத்திலிருந்து "புதுப்பேட்டை"வரை அத்தனை படங்களின் பாடல்களுமே அனைவர் விருப்பும் வகையில் அமைந்திருந்தன.சில காலமாக இவர்கள் இருவரும்  கூட்டணி சேராத நிலையில்,இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இரண்டு படங்கள் சேர்ந்து பணியாற்றியிருந்தார் செல்வராகவன்.

தற்போது செல்வராகவன் இயக்கிகொண்டிருக்கும் "இரண்டாம் உலகம்"படத்திற்காக இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.இவ்வாறு பல தரப்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய செல்வா, தான் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்காக மீண்டும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு கைகோர்க்கவுள்ளார்.

அண்மையில் இது குறித்து கருத்து தெரிவித்த செல்வா இத்தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post