Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இசை ரீதியாக வெற்றிபெற்றுள்ள சிம்புவின் "போடா போடி".


சிம்புவின் நடிப்பில் தற்போது வெளிவர காத்திருக்கும் "போடா போடி" படத்தின் இசை, கடந்த வாரம் வெளியாகியிருந்தது.இப்படத்தின் பாடல்கள் வெளியிடும் உரிமையை "சோனி" இசை நிறுவனம் பெற்றிருந்தது.

பாடல்கள் வெளியான நாளில் இருந்து ஏராளமான இசைத்தட்டுக்கள் விற்றுத் தீர்ந்திருப்பதால், மேலும் பல இசைத்தட்டுக்களை மீள் தயாரிக்க முடிவு செய்துள்ளது "சோனி" இசை நிறுவனம்.இப்படத்தின் பாடல்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் மிக பிரபலமடைந்து வருவதால், சென்னையில் உள்ள பல முன்னணி வர்த்தக நிறுவங்கள் மற்றும்,இரவு களியாட்ட விடுதிகளில் கூட இப்படத்தின் பாடல்களே ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இப்படத்திற்காக சிம்பு பாடிய "லவ் பண்ணலாமா வேணாமா" என்ற பாடல் இன்றைய தினத்தில்  மிக அதிகளவு மக்களால் விரும்பி கேட்கப்படும் பாடலாக அமைத்துள்ளது.இப்பாடல் மட்டுமல்லாது "அப்பன் மவனே வாடா" என்ற பாடல் கூட சிம்புவால் இப்படத்திற்காக பாடப்பட்டுள்ளது.

"போடா போடி" படத்தின் இசையமைப்பாளர் தரனுக்கு மேலும் பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை இப்படம் பெற்றுத்தந்துள்ளது.ஏற்கனவே சிம்புவின் நடிப்பில் வெளியான "மன்மதன்","வல்லவன்"."வானம்","சிலம்பாட்டம்" மற்றும் "விண்ணைத்தாண்டி வருவாயா" போன்ற படங்கள் இசை ரீதியாக மிக பெரிய வெற்றி கண்டிருந்தன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது "போடா போடி".

[vuukle-powerbar-top]

Recent Post