Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று மாலை கரையை கடக்கவுள்ள நீலம் புயல்

இன்று காலை கரையை கடக்கும் என அறிவித்திருந்த நீலம் புயலானது இன்று மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நீலம் புயலானது சென்னை மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என தகவல் வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அந்தவகையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 450 கி.மீ. தொலைவில் நீலம் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் புயல் தொடர்பான உதவிக்கு 1913 என்ற எண்ணுடன்  தொடர்பு கொள்ளலாம்.

புதிதாக உருவெடுத்த இந்த புயலுக்கு 'நீலம்' என்று பெயர் சூட்டியது பாகிஸ்தான் வானிலை மையமே ஆகும்


[vuukle-powerbar-top]

Recent Post