Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் ~ பசில் ராஜபக்சே

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி பெறுவது தொடரும் என்று இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

இந்தியாவைத் தவிர்த்து, சீனா போன்ற மற்ற நாடுகளுக்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை பயிற்சிக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 

இலங்கையின் நீண்ட நெடிய வரலாற்றில் இலங்கை வீரர்களுக்கு, இந்தியாவிலும், பாகிஸ்தானில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் இந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பவில்லை என்றும், தமிழகத்தில் தங்கள் நாட்டு பிரஜைகள் தாக்கப்பட்டது வருத்தமளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பிரச்சினைக்காகா இந்தியா மீதோ, அந்நாட்டு மக்கள் மீதோ வருத்தமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண்ட இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post