Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தன் அம்மாவின் பெயரை குழந்தைக்கு சூட்டிய விஜய்.


பிரபல நகை வியாபார நிறுவனம்  ஒன்றின் தூதுவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், இந்நிருவனத்திற்காக, பல விளம்பர படங்களில்   நடித்திருந்தார்.இவ்விளம்பரங்கள் அவருடைய இரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இவ்விளம்பரப் படங்களுக்கு இரசிகர்கள் காட்டிய ஆதரவினால், மேலும் ஒரு விளம்பரப் படத்தை தயாரித்துள்ளது அந்நிறுவனம்.அவ்விளம்பரப் படத்தில் விஜய்  அவரது தாயார் ஷோபாவுடன் நடித்திருந்தார்.

அதில் தாயின் மடியில் படுத்தபடி, தன் அன்றைய நாள் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விஜய், ஒரு குழந்தைக்கு தன் தாயின் பெயரை வைத்துவிட்டு, இது என் அம்மாவின் பெயர், எனக்கு மிக பிடித்தமான பெயர் என தான் கூறியதாக தன் அம்மாவிடம் கூறுவதாக அமைந்துள்ளது இவ்விளம்பரம்.

ஏற்கனவே விஜய் நடித்த விளம்பர படங்கள் இரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து வரும் நிலையில்,விஜய் தன் அம்மாவுடன் நடித்த இவ்விளம்பரம் மேலும் ஒரு படி உயர்வான ஆதரவை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


[vuukle-powerbar-top]

Recent Post