Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இறுதியாக புலித்தேவனுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிடுவாரா எரிக்?

விடுதலை புலிகளை சிங்களத்திடம் சரணடையுங்கள் என்று தன கூறிய போதும் அவர்கள் அதை இழுத்தடித்த காரணத்தால் தான் இவ்வளவு மனித படுகொலைகளும் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள எரிக் இறுதியாக புலித்தேவனுக்கு தொலைநகல் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்துள்ளார் 

விடுதலைப் புலிகள், தலைவர் சரணடைந்தால் மக்களையும் போராளிகளையும் காப்பாற்றியிருக்க முடியும் என்றும், பல இழப்புக்களை தவிர்த்திருக்க முடியும் என்று எரிக் சொல்ஹைம் சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். BBC தமிழ்ச் சேவைக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசானது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் தவிர ஏனைய போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கவிரும்புவதாக தன்னிடம் தெரிவித்தது என்றும், ஆனால் புலிகளின் தலைமை அதனை மறுத்ததால், பாரிய மனித அவலங்கள் நேர்ந்ததாகவும் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இவரின் அறுவுறுத்தலுக்கு அமைவாக வெள்ளைக் கொடியோடு சென்ற புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது. இதனை சொல்ஹைம் அதிர்வுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தும் இருந்தார்.
இந் நிலையில், புலிகளின் தலைமை எவ்வாறு சரணடையும் ? எரிக் சொல்ஹைம், 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி அதிகாலை ப.நடேசன் அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை FAX மூலம் அனுப்பியுள்ளார். அதில் இலங்கை அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகளை அவர் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். இக் கடிதத்தை ப.நடேசன் தேசிய தலைமையிடம் காட்டியும் உள்ளார். இருப்பினும் சரணடைவு குறித்து புலிகள் தலைமை ஒரு தீர்மாணத்தில் இருந்தது. இக் கடிதத்தை பார்த்த பின்னரும் அவர்கள், அதில் இருந்து தமது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. இக் கடிதத்தில் இலங்கை அரசு எதனைக் குறிப்பிட்டிருந்தது என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது. இவ்விடையத்தை அறிந்த நபர் எரிக் சொல்ஹைம் ஆகும். ஆனால் அவர் தன்னிடம் உள்ள பிரதியை மறைத்துள்ளார்.
அது எதற்காக ? அதனை வெளியிட அவர் ஏன் விரும்பவில்லை ? இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது எரிக் சொல்ஹைம் பல விடையங்களை தமிழ் மக்களிடம் இருந்து மறைத்துள்ளார் என்பது புலனாகிறது. இறுதி நேரத்தில் நடந்த பல விடையங்களை மறைத்து, பின்னர் விடுதலைப் புலிகள் மேல் இவர் குற்றத்தை சுமத்திவருவது, தற்போது தெளிவாகப் புலனாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post