Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் - இடிந்தகரையில் இருந்து நேரடித்தகவல் (படங்கள்)








கடந்த சில மாதங்களாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்றுவந்த போரட்டங்கள் பயங்கரமாக வலுப்பெற்றது நாம் அறிந்த ஒன்றே. 

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அன்று இடிந்தகரையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அணுஉலையை முற்றுகையிட்டனர்.இந்தப் போராட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தி இடிந்தகரை கிராமத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர்.

இதனால் அங்குள்ள மாணவர்களால் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க இயலாத நிலை ஏற்ப்பட்டது.அதன் பின்னர் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.இதனால் அங்குள்ள மாணவர்கள் இடிந்தகரை போராட்டத் திடலில் அமர்ந்தே படித்துவந்தனர். 

இந்த நிலையில் நேற்று நடந்த கடல் வழி முற்றுகைப் போராட்டத்திற்குப் பிறகு இன்று முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.இடிந்தகரை மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், ”நாங்கள் இதுவரை போராட்டத்திதிடலில் அமர்ந்து பாடங்களை படித்து வந்தோம் ஆனால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.

இது மகிழ்ச்சியாக இருக்கிறது.இருந்தாலும் போரட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டுதான் இருப்போம்.பள்ளி முடிந்த பிறகு மாலையில் போராட்டக் களத்திற்கு சென்று போராடுவோம்” என்றும் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post