Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை. சில பள்ளிகள் விடுமுறை.


தென்மேற்கு பருவ மலை தீவிரம் அடைந்ததை ஒட்டி சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கன மலை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரெங்கும் வழக்கம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது . இருந்தும் அரசு அதிகாரப் பூர்வமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் பல பள்ளிகள் இயங்குகின்றன. எனினும் சில பள்ளிகள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளன. பெற்றோர்கள் பள்ளி விடுமுறையா இல்லையா என குழம்பிய நிலையில் உள்ளனர் . 

வானிலை அறிக்கையின் படி இன்று முழுவதும் தமிழகமெங்கும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறியமுடிகின்றது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்யும் எனத் வான்நிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. 
[vuukle-powerbar-top]

Recent Post