Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இல்லத்தை விட்டு கூட்டமாக உணவு உண்ணும் இடிந்தகரை போராட்ட மக்கள் (படங்கள்)

இடிந்தகரை மக்கள் நாளை தங்களது அணு உலை முற்றுகை போராட்டத்துக்கு மிக மும்மூரமாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். 

இடிந்தகரை திட்டதிட்ட ஈழத்தை போல் தனிமை படுத்தப்பட்டு, அங்கு உணவு வரும் வழியை தற்போது அரசு தடுத்து விட்டது. மீனவர்களும் பல நாட்கள் கடலுக்கு போகாததால் அவர்கள் வருமானம் தடைபட்டு நிற்கிறது . இதனால் பலரும் அவர்கள் இல்லங்களில் உணவு சமைக்கு முடியாத நிலையில் உள்ளனர் . இருந்தும் அவர்களின் போராட்ட குணம் மாறவில்லை . இவர்களுக்கு உணவு வழங்கத் தான் பொதுவில் உணவு சமைக்கப்பட்டு  போராடும் மக்களுக்கு உணவு வழக்கப் படுகிறது. சொந்த நாட்டில் அகதிகள் போல் வாழும் இவர்களை பார்த்தல் யாருக்கும்  மனம் வேதனை அடையும்.   போராட்ட மக்களுக்காக தினமும் மூன்று வேளையும் உணவு பரிமாறப்படுகிறது.

அவர்களுக்காக பிஷப் ரோஜ் மேல்நிலை பள்ளியில் ஒழுங்கு செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.

அத்துடன் சிறு குழந்தைகளும், முதியவர்களும்  மணலில் அமர்ந்து தங்களது உணவை உண்பது மிகவும் வேதனைக்குரிய விடையமாக இருக்கிறது.













[vuukle-powerbar-top]

Recent Post