Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜய்க்கான கதையுடன் காத்திருக்கும் புதுமுக இயக்குனர்.


அண்மையில்  நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகர் விஜய், "சூப்பர் குட் பிலிம்ஸ்" படத் தயாரிப்பு  நிறுவனம் தயாரிக்கப் போகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் என்பது.

ஏற்கனவே இப்படத் தயாரிப்பு  நிறுவனம் தயாரித்திருந்த, "திருப்பாச்சி" மற்றும் "துள்ளாத மனமும் துள்ளும்" போன்ற படங்களில் விஜய் நடித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாகவே, இத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போகும்  மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஜெயம் ராஜா இயக்கி, விஜய் நடித்த "வேலாயுதம்" படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நேசன் என்பவரே, விஜய் நடிக்க இருக்கும்  இப் புதிய படத்தை இயக்கவுள்ளார்.அண்மையில் விஜய்யை சந்தித்த நேசன் படத்தின் கதையை மிக விரிவாக கூறியுள்ளார்.தற்போது விஜய்க்காக கதையில் சில மாறுதல்களை செய்துள்ள நேசன் படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார்.

மேற்படி படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




[vuukle-powerbar-top]

Recent Post