Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் கெஜ்ரிவாலால் குற்றம் சாட்டப்படும் குர்ஷித்

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தவறானவை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் சல்மான் குர்ஷித் அளித்த ஆதாரங்கள் தவறானவை என்று கூறினார். 

குர்ஷித் அளித்தவை 2010 ஆண்டு நடந்த முகாம்களின் புகைப்படங்கள் என்றும் , குர்ஷித்தின் அரக்கட்டளை சார்பாக 2010 -ம் ஆண்டு முகாம் நடத்தப்படவில்லை என்பதே குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் வெளியிட்ட பட்டியலில் பெரும்பாலானவர்களுக்கு கருவிகள் கிடைக்கவிலை என்றும் இந்த பட்டியலில் உள்ளவை பெரும்பாலன பெயர்கள் கற்பனையானவை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post