Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தனது அடுத்த ஆட்டத்தை தொடங்கும் இயக்குனர் வெங்கட் பிரபு.


இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் "பிரியாணி" படத்தின் படப்பிடிப்பில் மிக பரபரப்பாக உள்ளார்.சமையலறையில் இருந்து சிறிது ஓய்வெடுக்க நினைத்த வெங்கட் பிரபு  விஜய் தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களின் இல்லங்களுக்கு செல்லவுள்ளார்.

 புதுமைகள் பல புகுத்துவதில் முன்னணியில் திகழும் விஜய் தொலைக்காட்சி, தமிழ் சினிமா இரசிகர்களுக்காக புதிய போட்டி நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. முற்றிலுமாக சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளுடன் அமையவுள்ள இந்நிகழ்ச்சி "கோலிவுட் கிங்" என்ற பெயரில், வரும் 27 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள "ஏவிஎம்" படப்பிடிப்பு கூடத்தில் நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமா இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது "கோலிவுட் கிங்".


[vuukle-powerbar-top]

Recent Post