Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே வெளியாகும் "துப்பாக்கி".


 விஜய் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் "துப்பாக்கி" படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆயினும் இன்று நமக்கு கிடைத்த தகவலின்படி சற்று முன்கூட்டியே இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி "துப்பாக்கி" படமானது தமிழ் மற்றும் தெலுகுவில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.இதேவேளை இப்படத்திற்கான பாடல்களை ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ஆந்திரா வாழ் மக்கள்.

வரும் 29 ஆம் தேதி மேற்படி பாடல்கள் ஹைதராபாத்திலுள்ள  ஷில்பகலா வேதிகாவில் நடைபெறும் விழாவில் வெளியாகவுள்ளது.இவ்விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post