Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரித்தானிய தமிழ் மக்களோடு மக்களாக கலக்கும் இலங்கை புலனாய்வாளர்கள்!


பிரித்தானிய தமிழ் மக்களின் ஈழத்துக்கான சுதந்திர போராட்டத்துக்கான முன்னெடுப்புக்களை முடக்கும் நோக்குடன் மஹிந்த அங்கே பட்ட களங்கத்தை துடைக்கும் நோக்குடன் அகதிகள் போல வேசமிட்டு அங்கிருக்கும் தாயக உணர்வாளர்களை முடக்கும் செயல்பாடுகளில் இலங்கை புலனாய்வு பிரிவு களமிறங்கியுள்ளதாக தெரிய வருகிறது

பிரித்தானியாவை மையமாக வைத்து இலங்கை சிங்கள அரசினால் திட்டமிடப்பட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் அங்கு அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர் .
இவ்விதம் கருணா, டக்ளஸ் மற்றும் சிங்களவர்கள் அகதி தஞ்சம் கோரியுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள தமிழ் தேசிய விடுதலை போராட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த சில முக்கிய சட்டத்தரணிகளை இல்லாதொழிக்கும் நோக்குடன் இந்த திட்டமிடபட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சசின் கீழ் இயங்கும் சிறப்பு உளவுப் பிரிவினாரால் அவர்கள் இயக்கப்பட்டு வருகினறனர்.
இலங்கையின் சட்ட வல்லுனர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நகர்வுகள் பிரித்தானியாவை மையமாக வைத்து நகர்த்தப்பட்டுள்ளது.
அண்மையில் சில சட்டதரணிகளை நாடிய இவர்கள் விசாவினை பெற்றதும் அவர்களுக்கு நெருக்கடி தருகின்ற செயல்களை முடுக்கி விட்டனர்.
அதன் பின் அவர்களின் பின்புலன்களை ஆராய்ந்த போதே இந்த திடுக்கிடும் தகவலை கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.
இவர்களின் நோக்கு இவர்கள் எவ்விதம் அகதி தஞ்சம் பெறுவதற்கான நகர்வுகளை மேற்கொள்கின்றனர். அதனை தடுக்க இவர்கள் தேடிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அனைத்து விடயங்களையும்
நகர்த்தி செல்கின்றனர்.
இதற்கு உறுதுணையாக லண்டன் நகருக்கு உட்பட்ட பகுதியில் உணவகம் ஒன்றினை வைத்திருக்கும் மகிந்தவின் சகாவும் டக்ளசின் வலது கையுமான நபேரே முக்கி சூத்திரதாரியாக விளங்குவதாக தெரிய வந்துள்ளது.
இவரது உணவகத்தில் சென்று உணவை உண்ணும் மக்களுக்கு இவர் யார் என தெரியாது. இவர்கள் இலங்கை அரசியல் மற்றும் புலிகள் தொடர்பான விடயங்களை பேசுகின்ற போது அதனை அப்படியே காவி இலங்கை உளவுப்படைக்கு  குறித்த  உணவகத்தினர் பரிமாறி வந்ததும் தெரிய வந்துள்ளது.
எனவே சட்டத்தரணிகளே உங்கள் வேலைக்கு ஆப்பு வைக்க இப்படி ஒரு கூட்டம் களம் இறக்கப்பட்டுள்ளது. உசார் அடையுங்கள்! இல்லையெனின் உங்கள் வேலைக்கு ஆப்புத்தான்.
இவர்கள் இரண்டு விதமாக தமது நகர்வுகளை மேற்கொள்கின்றனர்.
இவர்களை இவர்கள் களவு செய்யும் பட்சத்தில் அதனை வைத்து இவர்களை மிரட்டி தமது பக்கம் சாய்த்து மக்கள் மத்தியில் குழப்பத்தினை உருவாக்குவது. அதற்கு வரமறுத்தால் இவர்களை இல்லாது ஒழிப்பது என்பன நடைபெற்று வருகின்றன.
தமிழ் தேசியம் பேசும் பிரித்தானியவில் இருந்து இயங்கும் ஒரு தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக தோன்றும் புதிய முகங்கள் பின்புலம் இந்த வட்டாரங்களில் தொடர்புடைய நபர்கள் என உள்ளக வட்டாரங்கள் சில நம்பகரமாக தெரிவித்துள்ளன.
இந்த தொலைக்காட்சி கடந்த வருடம் நட்டத்தில் ஓடியதாக பிரித்தானியா வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மக்கள் பணம் என கூறி இலவசமாக ஒலிபரப்பு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் யார் என தெரியாமல் இவர்கள், அவர்களை செவ்வி காண்கின்றனரா? இல்லை தெரிந்து தான் செய்கின்றனரா? என்பது தொடர்பாக விரைவில் சில விடயங்கள் அம்பலத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மகிந்தவை ஓட ஓட விரட்டிய லண்டன் மக்களின் ஒற்றுமையினை சீர்குலைக்க இப்படியும் சிங்களம் தமது உளவாளிகளை களம் இறக்கியுள்ளது!
தமிழீழ மக்களே! உசார். உசார்.. உளவாளிகள் உங்கள் அருகில், புலி வேஷம் போட்டு உங்களுடன், அவதானம்!
[vuukle-powerbar-top]

Recent Post