Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அனிருத்துடன் மீண்டும் கை கோர்க்கும் தனுஷ்.


நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக பெயர் வாங்கியதோடு மட்டுமல்லாது தற்போது சிறந்த பாடலாசிரியராகவும் பெயர் வாங்கியுள்ளார்."3 " மற்றும் " மயக்கமென்ன" படங்களுக்காக இவர் எழுதிய பாடல்களை இவரின் இரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா இரசிகர்களும் கொண்டாடியிருந்தனர்.

இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி,நடிகர் தனுஷின் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய செந்திலின் இயக்கத்தில் உருவாகும் "எதிர் நீச்சல்" படத்திற்காக இரண்டு பாடல்களை நடிகர் தனுஷ் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

சிவ கார்த்திகேயன் நாயகனாகவும், ப்ரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார், இசையமைப்பாளர் அனிருத்.

"3 " படத்தை போலவே இப்படமும் இசை ரீதியான வெற்றியை  பெற அலை செய்திகளின் வாழ்த்துக்கள்.

[vuukle-powerbar-top]

Recent Post