Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் மீன்வளம் குறைகிறதா? - அதிர்ச்சித் தகவல்

இடிந்தகரையில் மீன்வளம் குறைந்து வருவதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக பல நாட்களாக போராட்டம் நடந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் பல நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்றைய தினம் அவர்கள் கரையை வந்தடைந்த போது கடலில் மீன்வளம் குறைந்து உள்ளதாக அதிர்ச்சித் தகவலைக் கூறினர். இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்,

”எங்களிடம் சிறிய ரக படகே உள்ளது அதில் நாங்கள் எப்பொழுதும் கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில்தான் மீன் பிடிப்போம் இன்றும் இதே போல் பல நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க சென்றோம் ஆனால் முன்பைவிட மிகவும் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன.

இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை இன்று எங்களுக்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரங்கள் குறைந்து வருவதாக தெரிகிறது. இது எங்களுக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது” என்றார். 

ஏற்கனவே இடிந்தகரை மக்கள் அணு உலையால் மிகவும் மனவேதனையில் உள்ளனர்.இந்த நிலையில் அவர்களின் முக்கியத் தொழிலான மீன்பிடித் தொழில் பாதிக்க படுவதாக கருதுகின்றனர். தங்கள் வாழ்வாதரங்கள் அழிந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர் இடிந்தகரை மக்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post