Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின் வாரியத்தின் அலட்சியத்தால் பலியான ரமேஷ்! அரசு நடவடிக்கை எடுக்குமா? (படங்கள்)

பலியான ரமேஷ் 

மின் வாரியத்தின் அலட்சியத்தால் பலியான ரமேஷ்! அரசு நடவடிக்கை எடுக்குமா? (படங்கள்)

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரமேஷ் என்னும் நபர் அயனாவரத்தில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 43. இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது . நேற்று முன் தினம் அயன்புரம் மேட்டுத் தெருவில் உள்ள சந்திப்பில், மின்சார வாரியம் பழுது பார்க்கும் பணிக்காக சாலையில் குழி தோண்டிவிட்டு சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் மழை பெய்தவுடன் அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற சிலருக்கு அதிகாலையில் லேசான மின்சாரம் தாக்கி உள்ளது. ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை 

இந்நிலையில் நேற்று  காலையில் ரமேஷ் தனது அக்காள் மகனை கல்லூரிக்கு வழியனுப்ப சென்ற போது மேட்டுத் தெருவில்  இந்த தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில் கால் வைத்தது தான் அவர் செய்த குற்றம். குழி தோண்டி விட்டு மின்சார ஊழியர்கள் சென்றதால், அந்தக் குழியில் ரமேஷின் கால் சேற்றில் புதைந்தது. புதைந்தவுடன் ரமேஷை மின்சாரம் தாக்கியுள்ளது.  

இந்த நிகழ்வில் மின்சாரம் தாக்கி ரமேஷ் கீழே விழுந்தவுடன் , மின்சாரத்தை துண்டிக்க வேண்டி மின்சார அலுவலகதிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் அவரது அக்காள் மகன். ஆனால் மின்சார அலுவலகத்தில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. முடிவில் அந்த உறவினர் நேரடியாக அலுவலகத்திற்கே சென்று இது பற்றி கூறி மின்சார ஊழியர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளார் . பல மணிநேரம் கழித்து தான் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு , ரமேஷின் உடலை கைப்பற்ற முடிந்தது. சுமார் மூன்று மணி நேரம் ரமேஷ் அந்த தண்ணீரிலேயே பிணமாக கிடந்துள்ளார். மின்சார ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மை இதன் மூலம் அறியலாம். 

 இப்படி ஒரு அரசு நிர்வாகம் இருக்கையில் மக்களின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பது தெளிவாகிகிறது. இதே இடத்தில்  நம் குழந்தைகள் நடந்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும். அவர்களுக்கும் அதே கதி தானே ? இப்படி ஒரு அலட்சிய , பொறுப்பில்லாத , அரசு துறைகளை முதலில் சீர் படுத்த வேண்டும் . இல்லையெனில் மக்கள்  உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகும். இது போல் பல உயிர்கள் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஆண்டுதோறும் பலியாகிறது. ஆனாலும் அரசு அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை . 

அதிகாலையில் ரமேஷ் இறந்ததால் , அன்று பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் அந்த இடத்தில இருந்து விலகி சென்றனர். இதனால் இப்பிள்ளைகளின்  உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளது. இறந்தும் பள்ளி குழந்தைகளின் உயிரை என தம்பி காப்பாற்றினான் என்று ரமேஷின் தமக்கைகள் இருவரும் சொல்கின்றனர்.   இப்படி இறக்கும்  உயிர்களுக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்.  இனிமேலாவது அரசு கடுமையான முறையில் மின்சார வாரியத்தை எச்சரிக்க வேண்டும் . மின் ஊழியர்களுக்கு மழை காலத்தில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி கொடுத்தால் இப்படியான உயிர்கள் இறக்க நேராது . இவ்வாறு உயிர்கள் அநியாயமாக இறப்பதை அரசு நினைத்தால் நிச்சயம் தடுக்கலாம் . ஆனால் அரசு அதை செய்வதில்லை . 

இன்று ரமேஷ் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் , அப்பகுதி தாசில்தார் அவர் குடும்பத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் அரசின் சார்பாக வழங்கினார். ஆனால் இந்த இரண்டு இலட்ச ரூபாய் அவரது உயிரை திருப்பித் தருமா என்று அவர் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இப்படி ஒரு அரசை இவர்களை நம்பி அணுக்கழிவுகளை வெளியேற்றும் அணு மின் நிலையம் நமக்கு தேவைதானா ? இவர்களால் நமக்கு எந்த பாதுகாப்பும் தர முடியாது. அரசின் அலட்சியத்தால் நாம் உயிர் விட்டாலும் இந்த அரசு கவலைபடாது என்பதும் உண்மை.

 இறந்த ரமேஷ் அவர்களின் தமக்கை இருவர் 
 தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்த அரசு ஊழியர் மற்றும் அவர் அக்காள்


 ரமேஷ் வீட்டின் முன் தண்ணீர் தேங்கி நிற்கிறது 
 ரமேஷ் வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற மின் இணைப்பு சந்திப்பு 




 ரமேஷ் இறந்த இடம் . மின்சார வாரியம்  ரமேஷ் இறந்தவுடன் அவரசமாக குழியை மூடிய இடம்.


[vuukle-powerbar-top]

Recent Post