Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நீக்கம்

மதுரை இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நீக்கினார். 

மேலும் அவர் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் புகார் தெரிவித்துள்ளார். 

மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

நித்தியானந்தாவை நியமித்தது செல்லாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் மதுரை ஆதீனத்தை கையகப்படுத்தப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. 

இந்நிலையில் நித்தியானந்தா இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக மதுரை ஆதினம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நித்தியானந்தா சீடர்கள் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post