Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையின் தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை

இலங்கையின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் இலங்கையின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். 

சிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்தபோது, முறைகேடு இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தநிலையில், கணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பதவியில் சிராணி பண்டாரநாயக்க இருப்பது சரியல்ல என்பதாலேயே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இலங்கை அரசதரப்பு முனைவதாக கூறப்படுகிறது. 

தானாக முன்வந்து அவர் பதவி விலகாது போனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் இலங்கையின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 

அடுத்த மாத முற்பகுதியில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன
[vuukle-powerbar-top]

Recent Post