Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று மாலை புதிய ஊழலை அம்பலப்படுத்துவேன் : அரவிந்த் கெஜ்ரிவால்

சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய ஊழல் ஒன்றை இன்று மாலை அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், இந்த ஊழல் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருகன் ராபர்ட் வத்ராவின் முறைகேடுகள் குறித்து கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார். பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரியின் முறைகேடுகள் குறித்து வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ஊனமுற்றோருக்கான நல நிதியின் மோசடி செய்தது குறித்து வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவரும் கெஜ்ரிவால்தான். இதனால், இந்த இரு தேசிய கட்சிகளும் கெஜ்ரிவால் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர். இந்த சூழ்நிலையில், புதிய ஊழல் ஒன்றை அம்பலப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
[vuukle-powerbar-top]

Recent Post