Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"டுவிட்டர்" இணையத்தில் முன்னிலை வகிக்கும் "விஜய்" மற்றும் "துப்பாக்கி".


விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும்" துப்பாக்கி" படத்தின் பாடல்கள் வெளியிடும் நிகழ்வானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்," டுவிட்டர்" இணையத்தளத்தில் அதிகளவிலாக மக்கள் தேடிய இரண்டு சொற்களாக "விஜய்" மற்றும் "துப்பாக்கி" ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியா முழுவதும் அதிகளவிலான மக்கள் இந்த இரண்டு சொற்களையுமே "டுவிட்டர்" இணையம் வாயிலாக அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்.ஏ.ஆர் முருகதாசின் படங்களுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும்  இரசிகர்கள் இருப்பதுவும்,தமிழ் நாட்டை பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு ஏராளமான இரசிகர்கள் இருப்பதுவுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பாடல்கள் மற்றும் படம் ஆகியவை  வெளியாகும் முன்னரே இந்தளவிற்கு இரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இப்படமானது நிச்சயம் மிக பெரிய வெற்றியை கொண்டாடும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.

[vuukle-powerbar-top]

Recent Post