Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வதேரா மீது சொத்து குவிப்பு விசாரணை நடத்திய அதிகாரி அதிரடி இடமாற்றம்

சோனியா காந்தி மருமகன் வதேரா மீது சுமத்தப்பட்டுள்ள சொத்து குவிப்பு குற்றச்சாட்டை விசாரித்த அதிகாரி திடீரென இடமாற்றம். 

வதேரா
சோனியா காந்தி மருமகன் வதேராவுக்கும் டி.எல்.எப் நிறுவனத்திற்கும் இடையே நடந்த நில பரிவர்தனைகள் மீது உழல் நடந்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதனை விசாரிக்க ஹரியான மாநிலத்தின் உயர் அதிகாரி கோம்கா தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். 

உடனே சில நாட்களில் உயர் அதிகாரி கோம்கா பணி இட மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சில அரசியல் தலைவர்களின் செயல்பாட்டால் தான் நான் மாற்ற்பபட்டுள்ளேன்.இது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

காங்கிரஸ் மீது கடந்த சில மாதங்களாக அடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்த நிலையில் இதனை விசாரிக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது மிகுந்த சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post