Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுவால் எப்படி சீரழிந்தது சோமாலியா? ஒரு வரலாற்று பார்வை

அமெரிக்காவின் இரு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுமார் 3,000 உயிர்கள் பலியானதை திரும்ப திரும்ப பொதுமக்களின் சிந்தனையில் ஏற்றும் ஊடகங்கள் 3 மாதங்களில் 29,000 குழந்தைகள் இறந்து போனதற்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கவில்லை ஊடகங்கள் காரணம் அது அமெரிக்காவில் கையில் .வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.மேலும் கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வரட்சி மற்றும் பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் முறையான உணவு இன்றி இன்னலுற்று வருகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் சுமார் 7.5 லட்சம் மக்கள் இறக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதேவேளை சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த ஒர் ஆய்வு மையம் கூறியுள்ளது.அத்துடன், சோமாலிய மக்களுக்கு உணவு சரியான முறையில் கிடைக்காமையால் சுகாதார சீர்கேட்டிற்கும் அவர்கள் உள்ளாகி வருகின்றனர்.உரிய சிகிச்சை கிடைக்காமல் சோமாலியாவில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பசியால் இறக்கும் துயரம் நிகழத்தொடங்கியுள்ளது.முழுக்க முழுக்க வறட்சியின் கோர முகம் முழு வேகத்தில் தாண்டவமாடுகிறது. மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் பலியோனாரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதுஆப்ரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.

1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.

இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆகியது சோமாலியா.குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது.எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.

ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோமாலியா சோமாலியாவில் வேலைவாšப்பின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர் இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்புக்காக வேலை தேடி வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். அவற்றால் குழந்தைகளின் நிலை பரிதாபமாகியுள்ளதுமேற்கத்திய நாடுகள் தங்களின் அணுக்கழிவுகளைச் சட்டவிரோதமாக சோமாலியா கடல் பகுதிகளில் கொட்டியதும், அது 2004 சுனாமியின்போது அவர்களின் கடற்கரைகளில் வந்து பெரு அலைகளால் வீசப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து அதை உலக ஊடகங்கள் காணாமல் கண்களை முடியதும்

தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை.

அமெரிக்கவால் ஒரு பொம்மை அரசு உருவாகினாலும் அதனால் ஆயுதகுழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை . ஆயுதகுழுக்கள் உணவுக்காக , நீருக்காக என அடிப்படை தேவைகளுக்குக்காக தம்மிடையே சண்டை போடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் , ஒவ்வோரு குறிச்சிகளும் என இந்த ஆயுத குழுக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு சிற்றரசர்கள் ஆகினர் ஆயுத குழு தலைவர்கள்.

பசி , பட்டினி என இலட்சகணக்கானவர் மாண்டுபோயினர்.அனாலும் சோமாலிலாந்து எனும் ஒரு மாகாணம் மட்டும் தன்னை சோமாலியாவில் இருந்து விடுவித்து கொண்டு தன்னை ஒரு சுதந்திர தேசமாக அறிவித்தது. சோமலியா அதனை ஏற்றுக்கொள்ளாத போதும் சோமாலிலாந்து அதிகார பூர்வமன ஒரு அரசகவே உலக நாடுகள் சில நோக்குகின்றன. சில நாடுகள் சோமாலிலாந்தில் தனது அதிகாரபூர்வ தூதுவராலயங்களையும் கொண்டும் உள்ளன. அனாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் தனி நாட்டிற்கான அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.

உலகின் கண்களுக்கு இடியப்ப சிக்கலான பிரச்சனைகளை கொண்ட நாடாக மாற்றிய உலக நாடுகள் ஏன் இன்றுவரை சோமாலியாமீது கரிசனை காட்டாது உள்ளன ?இதன் பின்ண்ணியில் உலக நாடுகளின் நயவஞ்சகம் எப்படி உள்ளது.இவற்றிக்கு இப்பொழுது நாம் விடை தேடுவோம் ........

ஆம் இதன் அமைவிடத்தை நன்றாகவே பயன்படுத்திய உலக வல்லரசுகள் தமது இரசாயன (யுரேனிய )கழிவுகளை கொட்டும் இடமாக சோமாலியாவை பயன்படுத்தி கொண்டன என்பதே உறைக்கும் உண்மை.பெரிய கடல் வளத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் அதன் பலாபலன்களை பெறமுடியாது போய்விட்டனர் சோமாலியர்.கடற்கரைகளில் தினமும் ஒதுங்கும் இரசாயன கழிவுகளால் கடல் வாழ் உயிரிணங்கள் மட்டுமல்ல சோமாலியா மக்களே வகை தொகையின்றி செத்துக்கொண்டு இருக்கிறனர். உலக நாடுகளுக்கு சோமாலியாவின் கடலில் தமது கழிவுப்பொருட்டகளை கொட்டுவது மிகவும் இலாபகரமாக இருப்பதோடு சோமாலியாவில் ஒரு உறுதியான அரசு இல்லாமை இவர்களுக்கு இன்னும் வாய்ப்பாகிப்போனது.

ஒருபக்கத்தில் ஆயுத கலாச்சாரத்தை ஊக்கிவித்தபடி மறுபக்கத்தில் தமது சுய தேவகளை குறுக்குவழியில் அடையும் இன்நாடுகள் சோமாலியர்களை ஒரு மனித இனமாக மதிப்பதாகவே தெரியவில்லை.ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடி இருக்க அந்த இனம் வேரோடு சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.இன் நிலையில் தான் தங்கள் கடல் எல்லையில் வரும் கப்பல்களை தாக்கத்தொடங்கினர் சோமாலியர்கள் , வழக்கம் போலவே உலகம் அவர்களை கடல் கொள்ளையர் என்கின்ற பட்டத்துடன் அதனை வெறு ஒருதிசையில் அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பி அவர்களை கொள்ளையாரக்கி , பயங்கரவாதிகள் ஆக்கி அழகு பார்த்தது உலகம்.போராடித்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்கள் , நாகரிக உலகத்தின் சுயநலத்திற்க்கு பலியாகிபோன ஒரு மக்கள் கூட்டம்.

அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே..உலகின் குப்பைத் தொட்டியா?,ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும்.

அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல.அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை.இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது.ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.

வறட்சியும், பஞ்சமும் சோமாலியாவுக்கு புதிதில்லை என்றாலும் இவ்வளவு மிகப் பெரும் வறட்சி ஏற்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 1998ல் கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்கப்பட்டதற்கு பிறகு, குறிப்பாக அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் அல்காயிதாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று அமெரிக்காவால் கூறப்பட்ட அல் ஷப்பாப் போராளி குழுக்களை அழிக்கும் நோக்கில் எண்ணற்ற குழுக்களை ஆப்கனில் உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு போர் வெடித்து சீரழிவில் சோமாலியா வீழ்ந்தது.

2005ல் உள்ளூர் குழுக்களை ஒழித்து இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பு எனும் குழு 15 வருடத்தில் முதல் முறையாக அமைதியை நிலைநாட்டியது. ஒட்டு மொத்த சோமாலியா மக்களும் ஆதரித்த இக்குழுவை அல்காயிதா தொடர்புடையது என்று கூறி அமெரிக்க ஆதரவுடன் அண்டை நாடான எத்தியோப்பியா படையெடுத்து சுமார் 15,000 பொதுமக்களை கொன்றது. எனினும் சோமாலியா மக்களின் வீரத்தின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு படைகள் வெளியேறினாலும் அவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவர்கள் உருவாகிய விஷ வித்துகளும் இன்னும் தொடர செய்கின்றன.

இதனால் உள்நாட்டு போர் முற்று பெறாமல் பல்லாண்டுகள் மீண்டும் உள்நாட்டு போர் தொடர்ந்ததால் தென் சோமாலியா அல் ஷப்பாப் குழுவிடமும் வட சோமாலியா அமெரிக்க ஆதரவு பெற்ற தற்காலிக அரசாங்கத்திடமும் மீண்டன. அல் காயிதா முத்திரை குத்தப்பட்டதாலும், ஏனோ அல்-ஷப்பாப் குழுவும் உருவாகி வரும் பஞ்சத்தை குறித்த கவலையை சர்வதேச முஸ்லீம் சமூகத்திடமும் பகிராத காரணத்தால், அல்லது சொல்வதற்கு தடுக்கப்பட்ட சூழலால் இக்கொடிய பஞ்சம் உருவாகியுள்ளது.

எனவே 3 மாதத்தில் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு 6 இலட்சம் குழந்தைகளை ஈராக்கில் பொருளாதார தடை எனும் பெயரில் கொலை செய்த அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது தெளிவு. அது போல் கடந்த ஒரு வருடமாக இப்பஞ்சத்தை குறித்து ஆய்வு செய்வதில் காட்டிய அக்கறையை தீர்ப்பதில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும். இதே நிலை ஒரு வேளை முஸ்லீம் அல்லாத நாடுகளில் ஏற்பட்டிருந்தால் இது மாதிரி ஓர் அலட்சிய போக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்பது உண்மை.

இது வரை சோமாலியாவிலிருந்து 8 இலட்சம் நபர்கள் கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, ஏமன் ஆகியவற்றுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது வரை துருக்கியின் பிரதமர் எர்டோகான் அங்குள்ள அகதி முகாம்களுக்கு சென்று நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்ததை போன்றும் முஸ்லீம் உம்மா ஓர் உடம்புக்கு சமமானதாகும், ஓர் உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் எல்லா உறுப்புகளும் பங்கு பெறும் என்பதற்கேற்பவும் அச்சோமாலியா மக்களின் துயர் நீங்க இறைவனிடம் கையேந்துவோம். பொருளாதர உதவி செய்வோம். இது போல் இன்னொரு சோமாலியா உருவாகாமல் இருக்கவும் முஸ்லீமுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டால் உடனே துயர் துடைக்கும் சுல்தான் ஸலாஹூத்தின் , உமர் பின் அப்துல் அஜீஸ், முஹம்மது பின் கஜ்னவி போன்ற ஒரு நெஞ்சுரம் மிக்க தலைமையின் கீழ் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் ஓரே தேசமாய் வாழும் பாக்கியம் கிடைக்க படைத்தவனிடம் முறையிடுவோம்.
[vuukle-powerbar-top]

Recent Post