Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"விஸ்வரூபம்" படத்திற்கு "யு/ஏ" தரச் சான்றிதழ் வழங்கிய படத் தணிக்கை குழு.


கமல்ஹாசன்  இயக்கி நடித்த "விஸ்வரூபம்" படம் அண்மையில் படத் தணிக்கை சபைக்கு அனுப்பப்பட்டது.ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "விருமாண்டி" மற்றும் "ஆளவந்தான்" போன்ற படங்களின் பெரும்பாலான  காட்சிகள் படத் தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்டிருந்தது.

அதேபோல் "விஸ்வரூபம்" படத்தின் சில காட்சிகளை நீக்கிய படத் தணிக்கை குழு இப்படத்திற்கு "யு/ஏ" தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.இதேவேளை இந்தியில் "விஸ்வரூப்"என்று வெளியாகவுள்ள இப்படத்தின்  எந்த ஒரு பகுதியையும் நீக்காமல், இப்படத்திற்காக   "ஏ" தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது படத் தணிக்கை குழு.

"ராஜ் கமல் பிலிம்ஸ்" மற்றும் "பிவிபி" பட நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள இப்படத்தில் கமல் ஹாசன்,பூஜா குமார், ஆண்ட்ரியா,ராகுல் பாஸ்,ஜெயதீப்,நாசர்,சரீனா வாஹப் மற்றும் மைல்ஸ் ஆன்றசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுவரை இந்திய சினிமா கேட்டிராத நவீன  தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி அமைப்புடன் வெளிவரவுள்ளது  "விஸ்வரூபம்".

[vuukle-powerbar-top]

Recent Post