Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் மின்வெட்டு நேரம் அதிகமானதால் பிற மாவட்டங்களில் மின்வெட்டு குறைந்தது.



சென்னையில் மின்வெட்டு நேரம் அதிகமானதால் பிற மாவட்டங்களில் மின்வெட்டு குறைந்தது. 

சென்னையில் இன்று முதல் இரண்டுமணி நேரமாக மின் வெட்டு நேரம் அதிகமானதை அடுத்து தமிழகமெங்கும் வழக்கமான மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது . கோவையில் பதினான்கு மணிநேரம் இருந்த மின் வெட்டு பகல் வேளையில் வெறும் இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு இருந்தது. அதே போல் சேலம் சுற்றியுள்ள பகுதிகளிலும் , மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் , மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது . இதனால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சென்னையின் கூடுதல் ஒரு மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும் உள்ள ஊர்களில் விளக்கேற்றியுள்ளது. இதனால் பல மாதங்கள் கடுமையாக பதிக்கப்பட்ட தமிழக மக்கள் இன்று ஆறுதல் அடைந்துள்ளனர். 


[vuukle-powerbar-top]

Recent Post