Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈரான் மீதான தடைகளால் தள்ளாடுகிறது இலங்கை-தேயிலை விலையும் கடுமையாக வீழ்ச்சி

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கையின் தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஒரு கிலோ தேயிலை 3.5 டொலர் (452 ரூபா) விற்கப்பட்டது. 

ஆனால், இரண்டு வாரங்களுக்குள் இலங்கை தேயிலையின் விலை 0.30 டொலரினால் ( 45 ரூபா) வீழ்ச்சியடைந்துள்ளது. 

ஒக்ரோபர் நடுப்பகுதியில் நடந்த ஏலத்தில் இலங்கை தேயிலை 3.2 டொலருக்கே (407.31 ரூபா) விலை போயுள்ளது. 

ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே இலங்கை தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி தரகர்கள் தெரிவித்துள்ளனர். 

ஈரான் மீதான தடைகளை மேலும் இறுக்கப் போவதாக கடந்த 15ம் நாள் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்ததை அடுத்து, ஈரானுக்கான  இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

ஏற்கனவே, ஈரானில் எண்ணெய் ஏற்றச் சென்ற எரிபொருள் தாங்கி கப்பல்களை அமெரிக்க கடற்படை திருப்பி அனுப்பியது. 

இதனால் இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post