Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித் படத்தில் நடிக்கும் ராணா.


தெலுகுவில் மிக பரபரப்பாக பேசப்படும் நடிகர், ராணா.தெலுகுவோடு மட்டும் நின்று விடாமல்,எல்லா மொழிப் படங்களிலும் கால் பதிக்க விரும்பிய அவர் தற்போது இந்தி சினி உலகை நோக்கி சென்றுள்ளார்.

தற்போது "தம் மரோ தம்" என்ற இந்திப் படத்தில் நடித்து வரும் ராணா, தமிழ் சினிமா மீதும் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.தெலுகு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள " ஓங்காரம்" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் அவர் கால் பதிக்க திட்டமிட்டுள்ளார்.இப்படத்தில் நடிகை நயன்தாரா, ராணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அத்தோடு மட்டுமல்லாது,விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் ராணா.இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அஜித்தின் மிக எளிமையான குணத்தாலும், மற்றவர்களை மதித்து நடக்கும் அவர் பண்பாலுமே இப்படத்தில் நடிக்க  தான் சம்மதித்ததாக தெரிவித்தார்.

மேலும், இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்ப்பு வந்துள்ளதாகவும்,இது குறித்து தான் ஆலோசித்து  வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post