Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி வன்மனத்தை தூண்டிய சின்மயி தான் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்




சின்மயி - ராஜலட்சுமி!!! நமக்கு வந்தா ரத்தம் அவாளுக்கு வந்தா தக்காளி சட்னி.. 

சியோன் பள்ளி உரிமையாளரையும்,ஜெப்பியாரையும் கைது செய்த ஜெயா போலிசு பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவன் இறந்ததற்காக பள்ளியை நடத்தும் ராஜலட்சுமி,அவா என்பதாலேயே கைது பண்ணல.ராஜலட்சுமி மேல காட்டுன அதே அக்கறையைத்தான் இப்போ சின்மயி மேலயும் இந்த அரசு காட்டிட்டு வருது ! 

நியாயமாகப் பார்த்தால் மீனவர்களையும்,இடஒதுக்கீட்டையும் கடுமையா விமர்சித்த சுயசாதிப் பற்றாளர் சின்மயி தான் கைது செய்யப்பட வேண்டியவர்.கொடிய சாதிய வன்மத்தை வார்த்தைகளில் வீசிய சின்மயியை கண்டிக்க ஒவ்வொரு தமிழருக்கும் உரிமையுண்டு.அவா என்பதற்காகவும்,குரலுக்காகவும் ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மனிதர் என்று கூறிக்கொள்ள எவ்வித தகுதியுமில்லை,தமிழனுமில்லை ! 

காவலர்களே காவலர்களே ! புரட்சிப் பெண் சின்மயி பெண்களுக்காங்க போராட வந்துட்டாங்கன்னு உடனடி நடவடிக்கை எடுத்து ( ஹ்ம்ம் விவாதம் பண்ணதுக்கே) அப்பாவி ராஜனை கைது செஞ்சிருக்கிங்களே,அதே பெண்கள் தான் வாச்சாத்தியில் காக்கிகளால் கொத்துக்கொத்தாக கற்பழிக்கப்பட்டார்கள்.அந்த வெறிப்பிடித்தவர்களிடம் உங்க அதிகாரத்தை ஏன் காட்டல ?செலிபிரட்டி,அவான்னா மட்டும் தான் உங்களுக்கு மனுஷங்களா தெரிவாளா ??? 

அதிமேதாவி சின்மயி அவர்களே மீன்களை கொல்றது சாப்பிடறது உங்க அகராதியில தப்புன்னா,நீங்க தினந்தினம் சாப்பிடுற கீரை,காய்கறிகள் எல்லாம் உயிரினங்கள் தானே?? அப்போ கீரை காய்கறிங்க உயிரைக் கொல்லுறது தப்பு இல்லையா???ஒவ்வொரு உயிரும் தன் வயிற்றுப் பசிக்காக மற்ற உயிரை நாடியுள்ளது என்பது இந்த பிரபஞ்சமே அறிந்த உண்மை.உங்களுக்கு எப்படி தெரியாம போனது???

இந்தப் பிரச்சனையில் முழுத்தவறும் சின்மயி மீதுதான் உள்ளது.மீனவர்களை இழிவுப்படுத்தியும்,சாதி வன்மத்தை தூண்டியும் அவர் எழுதவே தான் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பை காட்டியுள்ளனர்.தவறு செய்ய தூண்டிய குற்றத்திற்காக முதலில் சிறையில் இருக்க வேண்டியவர் சின்மயி தானே ????ஏன் கைது செய்யவில்லை... 

(நமக்கு முரண்பட்ட கருத்தை பதிவிட்டிருந்தால் பதிவு சார்ந்த மாற்றுக் கருத்தை சொல்லி விவாதிக்கலாம்.அதை விடுத்து வன்சொற்களால் பெண்களை திட்டுவதும் கண்டனத்துக்குரியதே! )

- பு. சர்பனா

இக்கட்டுரை முகநூலில் வெளியான பதிவு. அவசியம் கருதி அலை செய்திகள் வெளியிடுகிறது. 


[vuukle-powerbar-top]

Recent Post