Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெற்றிகரமாக நடந்து முடிந்த அணு உலை முற்றுகைப் போராட்டம் (படங்கள்)

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இன்று நடைபெற்ற அணு மின் நிலையம் கடல்வழி முற்றுகை போராட்டம் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. சுமார் பத்தாயிரம் மீனவர்கள் மூவாயிரம் படகுகளில் வந்து இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போது இந்த போராட்டம் நிறைவு பெற்று மீனவர்கள் அவர்கள் ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். 

இவ்வளவு பெரிய கடல்வழி முற்றுகை போராட்டம் இந்திய நாட்டில் இதுவரை நடந்தது இல்லை. இதற்கு மேலும் மக்கள் விரோதமாக அணு உலைகளை திறந்தே தீர வேண்டும் என தமிழக அரசு விரும்பினால் அடுத்து வரவிருப்பது தமிழக வரலாற்றை திருப்பக் கூடிய தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் தான் என அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தெரிவித்து உள்ளனர். அதற்கு முன் தமிழக அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகின்றனர். 






















[vuukle-powerbar-top]

Recent Post